ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களை வசீகரித்து, ஆசை வார்த்தைகளை கூறி வரவழைத்து, பின்னர் அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், இளம்பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும் உல்லாசத்திற்கு ஆசை காட்டி தனி இடத்திற்கு வரவழைப்பதும், பின்னர் அங்கு ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதையும் இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தற்போது கைதாகியுள்ள இந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களது பின்னணியில் வேறு ஏதேனும் பெரிய கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்தும், இந்த கும்பல் இதற்கு முன்பாக இதேபோல வேறு யார் யாரிடம் கைவரிசை காட்டியுள்ளது என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவமானத்திற்கு பயந்து பலர் புகார் அளிக்க முன்வராததை சாதகமாக்கிக் கொண்டு இந்தக் கும்பல் தப்பித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் இது போன்ற தேன்சிட்டு வலைகளில் விழுந்து தங்களது பணத்தையும் நிம்மதியையும் தொலைக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.