இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், ரன்கள் மழை பொழிந்ததோடு மட்டுமல்லாமல், களத்தில் அரங்கேறிய ஒரு அபாரமான கேட்ச் போட்டியின் போக்கையே மாற்றியது.

இந்திய அணி நிர்ணயித்த 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி இந்திய அணிக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்தது. ஒருகட்டத்தில் வெற்றி இங்கிலாந்து பக்கம் சாய்வது போல் தெரிந்ததால் வான்கேடே மைதானமே சில நிமிடம் நிசப்தமானது.

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை வில் ஜாக்ஸ் சிக்ஸருக்கு விளாச முயன்றார். அப்போது எல்லைக்கோடு அருகே நின்றிருந்த அக்‌ஷர் படேல், பந்து சிக்ஸருக்குச் செல்வதைத் தடுத்து, அந்தரத்தில் பறந்தபடி பந்தை லாவகமாக உள்ளே தள்ளினார். அங்கிருந்த ஷிவம் துபே அந்தப் பந்தைப் பிடித்து ‘ரிலே’ கேட்ச் (Relay Catch) முறையை முழுமையாக்கினார்.

கண்களை இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அற்புதம், செட் இங்கிலாந்து ஜோடியைப் பிரித்தது. மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விக்கெட்டைக் கொண்டாடித் தீர்த்தனர். இந்த விக்கெட்டே போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனையாக  அமைந்தது; இல்லையெனில் போட்டி இந்தியாவின் கையை விட்டுப் போயிருக்கும். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.