சமீபத்தில் தான் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக விளக்கமளித்துள்ளார். புதிய தவெக ஆட்சிக்கு 6 மாத காலம் விமர்சனம் செய்யாமல் அவகாசம் கொடுப்போம் என்றுதான் தான் பேசியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் வதந்திகளைப் பரப்புபவர்கள் உண்மைக்கு மாறாக அந்தப் பேச்சைத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று தேவையில்லாமல் பேச ஆரம்பித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

​திமுக எப்போதுமே ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகவே செயல்படும் என்றும், தற்போதைய ஆட்சியின் தோல்விகளையும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஆட்சியைப் பற்றிக் கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மு.க.ஸ்டாலினின் இந்த விளக்கம், தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.