தமிழகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள் சார்பாக பல கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு பொருன்மைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவை குறித்த குறிப்புகள் கூட்டம் நடைபெறும் நேரத்தின் போது தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு முன்னதாகவே கிடைக்கப் பெறுவதில்லை. காணொளி கூட்டம் நடைபெறும் போது தான் இந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன. முக்கிய திட்டங்கள் குறித்த விவாதிக்கவும் ஆய்வு செய்வதற்கும் போதிய நேரங்கள் கிடைக்காததால் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெறும் நிலையில் அதற்கு நான்கு நாட்கள் முன்பாகவே கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை ஆட்சியர்களுக்கு துறைகளின் கூடுதல் செயலர்கள் மற்றும் முதன்மை செயலர்கள் ஆகியோர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.