பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போதைய ஆளும் கட்சியான டி.வி.கே  ஆட்சி அமைத்த விதம் குறித்து விமர்சித்த அவர், மக்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டமைப்பதே தங்களின் முதன்மையான இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இனிவரும் காலங்களில் விஜய்யை ‘சிஎம் சார்’  என்றுதான் அழைக்க வேண்டும் என்று அண்ணாமலை ஆவேசமாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

போதைப்பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்குவதில் உறுதியாக இருக்கும் அவர், மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த அரசியல் அதிரடிப் பேச்சு, தமிழகக் களத்தில் அடுத்தக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.