ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, காடுகளுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது தோழியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அச்சிறுமியைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.
மேலும் உடன் இருந்த மற்றொரு சிறுமி உடனடியாக கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய தீவிரத் தேடுதலின் முடிவில், அடர்ந்த காட்டுப் பகுதியில் மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்டனர்.
இதனால் முதலுதவி மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
