தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் தெலுங்கு சினிமாவில் பிரேம புஸ்தகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்த நிலையில் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் அறிமுகமான நிலையில் அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு நடிகர் அஜித் நடித்த ஆசை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக அஜித் மாறினார்.

இந்த படத்திற்கு பிறகு பல காதல் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித் ஆக்சன் திரைப்படங்களிலும் மிரட்டியுள்ளார். ஆசை படத்தை வசந்த் இயக்கியிருந்த நிலையில் மணிரத்தினம் தயாரித்திருந்தார். இந்நிலையில் இன்று 100 கோடி வரை சம்பளமாக பெறும் அஜித் ஆசை படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் அஜித்துக்கு ஆசை படத்தில் நடிக்க முதலில் 15,000 சம்பளமாக பேசப்பட்ட நிலையில் அந்த படம் வெற்றி பெற்றதால் பின் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.