தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் விஜய பிரபாகரன், இளைய மகன் சண்முக பாண்டியன். இதில் சண்முக பாண்டியன் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரை என்ற வெப் சீரிஸ் நடிக்க இருந்தார். இதற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் சூட் படங்களை பார்த்து விஜயகாந்த் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விஜயகாந்த் மறைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.