நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச 28ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த்திற்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய பிரபாகரன், இளைய மகன் சண்முக பாண்டியன்.

இதில் சண்முக பாண்டியன் இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் ‘குற்றப்பரம்பரை’ என்ற வெப்சீரிஸில் நடிக்க இருந்தார். இதற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட்ஷூட் படங்களையும் பார்த்து விஜயகாந்த் மகிழ்ந்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விஜயகாந்த் மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.