தமிழகத்தில் கடந்த 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மறுப்பிரதி சான்றிதழ் இ சேவை மையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டண விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மறுப்பிரதி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டண தொகையாக 100 ரூபாய் மற்றும் இ சேவை நிறுவனத்திற்கான சேவை கட்டணமாக 60 ரூபாய் என மொத்தம் 160 ரூபாய் செலுத்தி மறுபிறவி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மறுப்பிரதி சான்றிதழை இ சேவை மையத்தின் மூலமாக வழங்க இருப்பதால் மறு பிரதி கோரும் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.