தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகங்களில் காலை 10 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்திய ஆதிதிராவிடர் நலத்துறை ஏதேனும் குளறுபடி நிகழ்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.