திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொருளாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் என்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர் 72 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும் இதில் கலைஞர் நூற்றாண்டு விழா மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.