ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி ‘கோல்டன் டக்’ அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், மைதானத்திற்கு வெளியே அவர் செய்த ஒரு குறும்புத்தனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் நிர்ணயித்த 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கிய போது, பிரஃபுல் ஹிங்கே வீசிய முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வரிசையாக விக்கெட்டுகள் விழ, ராஜஸ்தான் அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும், ரவீந்திர ஜடேஜா மற்றும் டோனோவன் ஃபெரேரா ஜோடி இன்னிங்ஸை மீட்டெடுக்கப் போராடிய போது, டக்-அவுட்டில் அமர்ந்திருந்த சூர்யவன்ஷி செய்த செயல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளர் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, கேமராவைப் பார்த்ததும் திடீரெனத் தனது நாக்கை வெளியே நீட்டி வேடிக்கையான முகபாவனைகளை வெளிப்படுத்தினார்.
இந்த “க்யூட்” வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “மைதானத்தில் அதிரடி காட்டினாலும், நிஜத்தில் அவர் இன்னும் ஒரு துறுதுறுப்பான சிறுவன் தான்” என்று கொஞ்சி வருகின்றனர். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், சூர்யவன்ஷியின் இந்த வேடிக்கையான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
Proper 15 years old vibe 😂😂😂
Vaibhav Sooryavanshi proves that he is HUMAN too by getting out on Duck 🙏🏻💀
SRH : 9-5
RCB 49 run records in danger ⛔️ #RRvsSRH https://t.co/JttH5zT04C
— Pan India Review (@PanIndiaReview) April 13, 2026
“>
ஆட்டமிழந்த சோகத்தை மறந்து சிறுபிள்ளைத்தனமாக அவர் செய்த இந்தச் செயல், ஐபிஎல் வரலாற்றில் ஒரு கலகலப்பான தருணமாகப் பதிவாகியுள்ளது.
