ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் இளம் மேதை என்று அழைக்கப்படும் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, SRH அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே ‘கோல்டன் டக்’ அவுட் செய்து அதிர்ச்சியளித்துள்ளார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி, ஹிங்கே வீசிய வேகமான பந்தில் புல் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு உயரே எழும்ப, அதனை சலில் அரோரா கச்சிதமாகப் பிடித்து அசத்தினார்.

“>

 

இந்த முக்கிய விக்கெட்டைக் கண்டதும் சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாரன் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அபாரமான ஃபார்மில் இருந்த சூர்யவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், ஹைதராபாத் அணிக்கு அது ஒரு கனவுத் தொடக்கமாக அமைந்தது.