
குஜராத் டைட்டன்ஸ் நட்சத்திர ஆல்ரவுண்டர் ராகுல் தெவதியா தந்தையான நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் தெவாடியா தந்தையானார். அவரது மனைவி ரித்திக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நேற்று) ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நற்செய்தியை தனது ரசிகர்களுடன் ராகுல் தெவாடியா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதை தொடர்ந்து அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செவ்வாயன்று, இடது கை ஆல்ரவுண்டர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார். இந்தப் படத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பாதங்கள் தெரியும். பதிவைப் பகிர்ந்துகொண்டு, அவர் குறிப்பிட்டதாவது, இன்று நாம் இரண்டிலிருந்து மூன்றாகிவிட்டோம். அவள் இங்கே இருக்கிறாள்! அவள் இன்று வந்திருக்கிறாள். அழகான மற்றும் இனிமை #ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று தெரிவித்தார்.
ராகுல் தெவதியாவின் இந்த பதிவை ரசிகர்கள் மிகவும் விரும்பி, அவர் தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. யுஸ்வேந்திர சாஹல், மந்தீப் சிங் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு மகள் பிறந்ததற்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், ஜஸ்பிரித் பும்ராவும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தந்தையானார். அவரது மனைவி சஞ்சனா கணேசனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இதனைத்தொடர்ந்து மீண்டும் ரசிகர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ராகுலுக்கும் ரித்திக்கும் பிப்ரவரி 2021 இல் நிச்சயதார்த்தம் நடந்தது, அதன் பிறகு 2021 நவம்பர் 29 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
30 வயதான ராகுல் தெவாடியா கடைசியாக ஐபிஎல் 2023 இல் விளையாடினார். இருப்பினும், அந்த சீசனில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை. அவர் 17 போட்டிகளில் 21.75 சராசரியில் 87 ரன்கள் எடுத்தார்.
ராகுல் தெவாடியா 2021 ஆம் ஆண்டில் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் :
ஐபிஎல் 2021ல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது ராகுல் தெவாடியா சிறப்பாக செயல்பட்டார். இந்த செயல்பாட்டின் அடிப்படையில், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேசிய அணியில் இடம் பெற்றார். ஆனால், அவரது அறிமுகம் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், அணியில் இடம் கிடைக்காததால், சமூக ஊடகங்கள் மூலம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
𝙏𝙝𝙚 𝙂𝙏 𝙛𝙖𝙢𝙞𝙡𝙮 𝙜𝙧𝙤𝙬𝙨 𝙗𝙮 1️⃣0️⃣ 𝙡𝙞𝙩𝙩𝙡𝙚 𝙩𝙤𝙚𝙨 💙
Congratulations, Rahul & Ridhi 💫#AavaDe
📸: Rahul Tewatia pic.twitter.com/JrcrORJXZB— Gujarat Titans (@gujarat_titans) September 5, 2023
Rahul Tewatia and his wife Ridhi Pannu have been blessed with a baby girl👼
Congratulations to both of them!❤️ pic.twitter.com/HCMZ7lHAGo
— CricTracker (@Cricketracker) September 6, 2023