இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் 29 இன்னிங்ஸில் 1500 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்..

2023 ஆசியக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிராக இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் உலக சாதனை படைத்தார். நேபாளத்துக்கு எதிராக 62 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார் கில். 

இதன் போது ஷுப்மான் கில் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 1514 ரன்களை கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1500 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை சுப்மன் கில் பெற்றார். இந்திய பேட்ஸ்மேன் 29 இன்னிங்ஸில் 1500 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்தார். கில் 30 இன்னிங்ஸ்களில் இந்த எண்ணிக்கையை கடந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹஷிம் அம்லாவின் சாதனையை முறியடித்தார்.

வேகமாக 1500 ரன்களை கடந்த பேட்ஸ்மேன்கள் :

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்களை எட்டியதன் அடிப்படையில், 29 இன்னிங்க்சில் சுப்மன் கில் 1500 ரன்களை கடந்து முதலிடத்திலும், 30 இன்னிங்ஸ்களில் ஹஷிம் அம்லா 2வது இடத்திலும், ரியான் டென் டோஸ்சாட் (நெதர்லாந்து), ஜார்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்) மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் 3வது இடத்தில் உள்ளனர். இந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் 32 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை கடந்தனர்.  

டெண்டுல்கரின் சாதனையும் முறியடிக்கப்பட்டது :

இந்த காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ஷுப்மான் கில் முறியடித்தார். கில் 25 ஒருநாள் இன்னிங்ஸ்களில் இந்தியாவுக்காக அதிக ரன்களை தொடக்க ஆட்டக்காரராக எடுத்தார். கில் 1335 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் (1151) சாதனையை முறியடித்தார். இந்தப் பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா 1100 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

25 இன்னிங்ஸ்களில் தொடக்க வீரராக இந்தியாவுக்காக அதிக ஒருநாள் ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்

  • 1335 – சுப்மன் கில்
  • 1151 – சச்சின் டெண்டுல்கர்
  • 1100 – ரோஹித் சர்மா
  • 1069 – நவ்ஜோத் சிங் சித்து
  • 1060 – ஷிகர் தவான்
  • 978 – வீரேந்திர சேவாக்

கில் சிறப்பாக விளையாடினார் :

23 வயதான ஷுப்மன் கில் சில காலமாக மோசமான பார்முடன் போராடிக்கொண்டிருந்தார், ஆனால் அவர் குரூப் ஸ்டேஜில் நேபாளத்திற்கு எதிராக அபாரமான இன்னிங்ஸை விளையாடி பார்முக்கு திரும்பினார். கில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் (74*) ஆட்டமிழக்காமல் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டார். டிஎல்எஸ் முறையில் இந்தியாவை 17 பந்துகள் மீதமுள்ள நிலையில், 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது இந்திய அணி.

பல்லேகலேயில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய நேபாளம் அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு மழை காரணமாக 23 ஓவர்களில் 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 20.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து சூப்பர்-4க்குள் நுழைந்தது.

சூப்பர் 4ல் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது மழைக்கு வாய்ப்பு :

ஆசியக் கோப்பை 2023 இன் குரூப்-ஸ்டேஜ் முடிந்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர்-4க்கு முன்னேறியுள்ளன. சூப்பர்-4 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் 80 முதல் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.