மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் அருகே உள்ள பாப்காவ் பகுதியில், மனிதாபிமானமே இல்லாத ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை இல்லாத ஒரு தம்பதி, தனது நண்பரின் மனைவி இறந்ததால் அவரது 3 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், தில்ஷாத் ஷேக் என்ற அந்த வளர்ப்புத் தாய், அந்தச் சிறுமி பக்கத்து வீட்டுப் பெண்ணை ‘அம்மா’ (மம்மா) என்று அழைத்ததற்காக ஆத்திரமடைந்து, பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்.
View this post on Instagram
அந்தப் பெண்ணின் கோபம் அத்துடன் நிற்காமல், சிறுமியின் கண்களிலும் வாயிலும் மிளகாய் பொடியைத் தூவி சித்ரவதை செய்துள்ளார்.
வலியால் அந்தப் பிஞ்சு குழந்தை அலறித் துடித்தும், கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அந்தப் பெண் தொடர்ந்து தாக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பிவண்டி போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
