பெங்களூருவில் சிரில் மோனிஸ் என்ற நபர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுக்க விடாமல் மனைவி நடத்திய பாசப் போராட்டம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் உடலை பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், தனது கணவர் உயிரிழக்கவில்லை என்றும், அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறி அவரது மனைவி தடுத்து நிறுத்தினார்.

​”என் கணவரை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்” என அவர் போலீசாரிடம் கெஞ்சிய உருக்கமான காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்புக்குரியவரின் பிரிவைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் காட்டிய பாசம் காண்போரை நெகிழச் செய்துள்ளது.