தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும், சினிமா உலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித்குமார் திரையுலகில் இந்த அளவிற்குப் பிரம்மாண்ட உயரங்களைத் தொட்டபோது, அதை அருகில் இருந்து பார்த்து மனதார மகிழ்ந்தவர் அவரது தாயார்.
அப்படிப்பட்ட தன் பாசத்திற்குரிய அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக உருக்கமான முறையில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்;
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித்…
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2026
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள அவர், அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரிலிருந்து அவர் மீளத் துணைநிற்க வேண்டும் என அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
