ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சோனாமார்க்கில், கடந்த வியாழக்கிழமை திடீரென வீசிய பலத்த காற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த திடீர் சூறாவளி காற்று காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் காற்றில் பறந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடைக்காரர்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

“>

இந்த இயற்கை சீற்றத்தின்போது, காற்றில் பறந்து வந்த பொருளின் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வானிலை மாற்றங்கள் மற்றும் ‘வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்’ காரணமாக ஏற்பட்ட இந்த பலத்த காற்று மற்றும் மழையினால், சுற்றுலாப் பயணிகள் திறந்தவெளிகளிலும் சாகச விளையாட்டுப் பகுதிகளிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.