திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். மற்றவர்களின் கூட்டணியைப் பற்றிப் பேசி வந்த திமுகவுக்குள்ளேயே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடருமா என்பதே சந்தேகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணிக்குள் இருப்பவர்களே ஒருவரை ஒருவர் வீழ்த்திவிடுவார்கள் என்று கூறிய தமிழிசை, திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதை உறுதிபடத் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக – காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அவர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார்.
