“நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன்” என்பது வெறும் பழமொழி அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் 14 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளி, ஒரு சிறுமி தாயால் திட்டப்பட்டபோது அடக்க முடியாமல் அழுவதைப் பதிவு செய்கிறது. அந்த நேரத்தில், அவளது செல்ல நாய் விரைந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டு ஆறுதலளிக்கிறது. வார்த்தைகள் இல்லாமலேயே அந்த நாய், “நீ ஏன் அழுகிறாய்? நான் உன்னுடன் இருக்கிறேன்… எல்லாம் சரியாகிவிடும்,” என்கிற மாதிரியான உணர்வை வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோவை ‘X’  தளத்தில் @PuppiesIover என்ற கணக்கு பகிர்ந்துள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்துள்ளனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர். பலர் தங்களது மனநிலையை கருத்துப் பகுதியில் பதிவிட்டுள்ளனர். ஒருவர், “இந்த  உயிரினங்கள் வார்த்தைகள் இல்லாமலேயே நம் உணர்வுகளை உணரக்கூடியவை,” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “அந்த நாய், ‘நீ ஏன் அழுகிறாய்?’ எனக் கேட்டு அவளை ஆறுதலளிக்க வருகிறது போல தெரிகிறது,” என்றுள்ளார்.

 

மேலும் மற்றொரு நெட்டிசன், “செல்லப்பிராணிகள் எப்போதும் நம்மை விட்டு போவதில்லை. அவர்கள் உண்மையான நண்பர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற காணொளிகள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அந்த தனித்துவமான பிணைப்பை மீண்டும் நினைவூட்டுகிறது.