சமூக ஊடகங்களில் தற்போது பெரும் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இதில், ஒரு குரங்கும் சிறுவர்கள் குழுவும் ஒரேபோல் உற்சாகமாக நடனமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மலைப்பகுதியில் ஒரு பாறையின் அருகே அமைதியாக அமர்ந்திருந்த குரங்கை பார்த்த சிறுவர்கள் குழு ஒன்று, அந்தக் குரங்கை கண்டு மகிழ்ச்சியுடன் குதித்து, சத்தம் போட்டபடி நடனமாட தொடங்குகிறார்கள்.

சிறுவர்களின் இந்த அசைவுகளை பார்த்த குரங்கும், தாளம் ஒத்துக் கொண்டு தானும் குதித்து, துள்ளலாக நடனமாட ஆரம்பிக்கிறது.  இந்தக் காட்சி அங்கு இருந்தவர்களையும், காணொளியைப் பார்த்தவர்களையும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

@gharkekalesh என்ற கணக்கில் இந்த வீடியோ X-இல்  பகிரப்பட்டுள்ளது.  இதுவரை 1.82 லட்சம் பார்வைகள் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு பல நெட்டிசன்கள் நகைச்சுவையான கருத்துக்களும், ஆச்சரியமான பதில்களும் கொடுத்துள்ளனர்.

“குரங்கு, ‘நான் எந்த விலங்குகளுடன் சிக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்று யோசித்திருக்கும்,” என்றும், “டார்வின் கூறியது முற்றிலும் சரிதான்” என்கிற கருத்தும் வைரலாகி வருகிறது. குழந்தைகள் காட்டிய மகிழ்ச்சியில் ஒரு குரங்கும் அன்போடு கலந்து கொண்ட இந்த மனதை உருக்கும் வீடியோ, மக்களை சில நிமிடங்கள் அழகாக சிரிக்க வைத்திருக்கிறது.