
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அகமது சேஷாத். இவர் பெர்சனாலிட்டியாக இருந்ததால் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது பாகிஸ்தான் அணியில் ஒரு இளம் வீரர் அழகாகவும் சிறப்பான முறையில் விளையாடிய ரசிகர்களின் பாராட்டை பெற்றால் அது சீனியர் வீரர்களுக்கு பிடிக்காதாம்.
இதனால் அந்த இளம்வீரரை ஓரங்கட்டி விடுவார்கள். இதே கொடுமையை நானும் அனுபவித்துள்ளேன். என்னைப் போன்ற சில வீரர்களும் இந்த பிரச்சனையை அனுபவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பற்றி முன்னாள் வீரர் ஒருவர் இப்படி ஒரு கருத்தை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.