வங்காளதேசத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ஓய்வு பெற்ற பிறகு ஐநா சபையின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். கடந்த வருடம் ஏமன் பயங்கரவாதிகளுடன் ஐநா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த சுபியில் அனம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது ஏமன் தலைநகர் ஏடனில் வைத்து சுபியுல் மற்றும் அவருடன் சென்ற நான்கு அதிகாரிகள் அல்-கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மீட்பு தொகை 248 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் ஐநா சபை அதிகாரிகளை மீட்கும் பொருட்டு தூதர்களை நேரில் பேச்சுவார்த்தைக்காக அனுப்பியது. இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்த பின்னர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அல்கொய்தா சுபியுல் அனமின் உடல் நலனை கருத்தில் கொண்டு விடுதலை செய்துள்ளனர். அவருடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.