தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவ. 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.