தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நவம்பர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் இன்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை மறுநாள் அதாவது நவம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.