தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வரும் டிசம்பர் மாதம் 6- தேதி சென்னையில் நடைபெறும் ஒரு தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது அம்பேத்கர் நினைவு நாளன்று அந்த புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட விஜய் அந்த புத்தகத்தை பெற்றுக் கொள்வதாக கூறப்பட்டது. இந்தியாவில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் புத்தக வெளியீட்டு விழா என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தற்போது விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகும் முடிவு செய்யப்படும். திமுக கூட்டணியில் தொடர்வதில் உறுதியான நிலைபாடுடன் இருப்பதாக கூறினார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஏற்கனவே கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிவரும் நிலையில் விஜயும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியதால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மற்றும் திருமாவளவன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.
