நவீன உயிரியலில் புரட்சியை ஏற்படுத்திய மற்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் (வயது 97) காலமானார். அவர், உயிரினங்களின் அடிப்படையான DNA-வின் இரட்டைச் சுருள் (Double Helix) வடிவ அமைப்பைக் கண்டறிந்தவர்களில் ஒருவராவார்.
இந்த மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு, ஒரு உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வழிவகுத்தது. இதன் காரணமாக, மருத்துவம் மற்றும் தடயவியல் (Forensics) போன்ற துறைகளில் கூடுதல் தொழில் நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அறிவியல் உலகில் பெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட்சனின் மறைவுக்குப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
