
சூர்யகுமார் யாதவ் தனது விரலை நீட்டி அர்ஷ்தீப் சிங் மீது கோபத்தை வெளிப்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சமீபத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின் 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில், தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. இந்த தொடரில், சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி பேட்டிங் மற்றும் சிறந்த தலைமைத்துவத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் சூர்யகுமார் யாதவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் அர்ஷ்தீப் சிங்கிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவது போல தெரிகிறது.
வைரலான வீடியோவில், அணி பேருந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் சூர்யகுமார் யாதவ் கோபப்படுவது போல தெரிகிறது. ஆனால் சூர்யா கேலித்தனமாக செய்தாரா? அல்லது உண்மையாகவே கோபப்பட்டாரா? என தெரியவில்லை. இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது மொபைலில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே இந்த வீடியோ வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. பேருந்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் பார்ப்பதற்கு அவர் அர்ஷ்தீப் சிங்கை நோக்கி விரலை காட்டி தனது கோபத்தை வெளிப்படுத்துவது போல தெரிகிறது.
Why is Suryakumar Yadav so angry? And on whom?🤔pic.twitter.com/YV0FgLDlSQ
— Keh Ke Peheno (@coolfunnytshirt) December 16, 2023