பெங்களூரு மற்றும் மைசூர் அதிவேக பாதையில் இரண்டாம் கட்டமாக சுங்க கட்டணம் அதிகரித்த நிலையில் கர்நாடக அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கு 15 ரூபாயும், ராஜஹம்சா பேருந்துகளுக்கு 20 ரூபாய், எலக்ட்ரானிக் பேருந்துகளுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகத்திற்கு போக்குவரத்து சேவை வழங்கும் கர்நாடகா அரசு பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் கட்டமாக பெங்களூரு மற்றும் நித்தகட்டா வழித்தடத்தில் சுங்க கட்டணம் வசூல் தொடங்கப்பட்டது. கோவை, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கர்நாடக அரசு பேருந்துகள் சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.