தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில், சாலையின் நடுவில் ஓடிய அரசுப் பேருந்தின் மீது ஏறி பாலஸ்தீனக் கொடியை அசைத்த இளைஞர்களை பற்றிய வீடியோ இணையத்தில் பரவலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்றது ஹைதராபாத்தின் மத்திய பகுதியில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், 2 முதல் 3 பேர் சாலையில் ஓடிக்கொண்டிருந்த TSRTC அரசுப் பேருந்தின் மேல் ஏறி, அதில் ஒருவர் பாலஸ்தீனக் கொடியை ஆட்டுவதைக் காணலாம். வீடியோவில், சம்பவ இடத்தில் போலீசார் இருந்தது தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆனால் அவர்கள் தடுக்காமல், தங்கள் மொபைல்களில் அந்த காட்சியை பதிவு செய்வது போன்ற காட்சிகளும் உள்ளன. பேருந்தின் மேல் நின்ற நபர்களை கீழிறங்கும்படி போலீசார் கூறியபோதும், அந்த இளைஞர் தனது செயலை தொடர்ந்ததாகவும் வீடியோவில் தெரிகிறது.

 

இந்த வீடியோவைக் கவனித்த ஹைதராபாத் போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். “பொதுப் பணிகள் மற்றும் பொது பாதுகாப்பை குலைக்கும் எந்த நடவடிக்கைக்கும் சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தற்போது தெலுங்கானா போலீசாரின் சாரணையின் கீழ் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.