தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அரசு ஊழியர்கள் சிலர் தங்களுக்குள் whatsapp குழுக்களை உருவாக்கி அதிகாரப்பூர்வமில்லாத அரசின் சில தகவல்களை அந்த குழுவில் பதிவிடுவது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல்கள் பலரால் பகிரப்பட்டு அமைதியை சீர்குலைக்கின்றன . இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு தகவல் கொண்டு வரப்பட்ட நிலையில் பள்ளி கல்வித்துறை தற்போது முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கேடு விளைவிக்கும் பொது ஊழியர் என்று கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இன்றி பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் பொது வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்தால் அல்லது தாமாக குழுக்களை உருவாக்கி செய்திகளை பரப்ப கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.