தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வருடமும் இந்த பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு சார்பில் நிரப்பப்படுகிறது. அதன்படி கடந்த கல்வியாண்டில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதில் ஆசிரியர்கள் அல்லாமல் உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குனரின் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த உபரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியிடமாக கருதப்படாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.