திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தட்டப்பந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22). இவர் செய்யாறு அருகே உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். பின்னர் காஞ்சிபுரத்தில் தனியார் போட்டி தேர்வு மையத்தில் டிஎன்பிசி தேர்வுக்காக படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஸ்ரீதர் குரூப் -4 தேர்வை எழுதினார்.
பின்னர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர் தேர்வை சரியாக எழுதவில்லை என மன உளைச்சல் இருந்து வந்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கென தனியாக பயிற்சி வகுப்பு சென்றும் தேர்வை சரியாக எழுதவில்லை என நினைத்து ஸ்ரீதர் விரக்தி அடைந்தார். எனவே ஸ்ரீதரின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தினர்.
இருந்தபோதிலும் நேற்று முன்தினம் ஸ்ரீதரின் பெற்றோர் தூங்கிய பின்பு அவர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்த ஸ்ரீதரின் பெற்றோர் பேரதிர்ச்சியில் உறைந்தனர். பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு அந்த போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீதரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
