மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மாநில அரசுகளும் அகலவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகழ்விலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக 7000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் தின கூலி பணியாளர்கள் என அனைவருக்கும் 3 நாள் சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு வெளியாகி உள்ள நிலையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாளர்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 46 சதவீதம் அகலவிலைப்படி பெறுவார்கள். மேலும் மே 15ஆம் தேதி யோகி அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது