இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. சமீபத்தில் AI என்ற தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ள நிலையில் இதனால் வேலை வாய்ப்பு துறைகளிலும் அதிக பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா குறித்த தவறான வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அதிக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது