இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவ காப்பீடு நடைமுறைகளில் தற்போது சில புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது நோயாளிகள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சைக்கான முழு பணத்தையும் செலுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்டு அதன்பிறகு காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி இருந்தது.

தற்போது மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளியின் சிகிச்சைக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் 100% காப்பீடு மூலமாக சிகிச்சை பெறும் படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை உபயோகமாக இருந்தாலும் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் தாங்கள் விரும்பிய மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.