இந்தியாவின் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்களுக்காக senior citizen saving scheme என்ற திட்டத்தின் மூலம் இரட்டைப்பு லாபத்தை வழங்குகின்றது. இந்த சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இதில் இணைந்து குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் சேர்ந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்த தொகையை மூத்த குடிமக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் 5 வருடங்களுக்கும் மேலாக தொடர நினைத்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி கணக்கீடு செய்யப்பட்டு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது