இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது UIDAI அமைப்பு ஆதாரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. ஆதாரை புதுப்பிக்க சில உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதில் கைரேகை மற்றும் கண் கருவிகளை உடைத்த விவரங்களை அப்டேட் செய்வதற்கு கட்டாயம் ஆதார் மையத்தை அணுக வேண்டும்.

ஆதாரை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முதலில் uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார் அப்டேட் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பித்ததும் அங்குள்ள அதிகாரிகள் பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து விவரங்களை அப்டேட் செய்வார்கள்.

இதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தியதும் உங்களுக்கு மையத்தில் இருந்து ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

இதனை வைத்து உங்களின் ஆதார் அப்டேட் விவரங்களை நீங்கள் எளிதில் கண்காணிக்கலாம்.