கேரள மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை சேர் நேற்று தாக்கல் செய்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய அகலவிலைப்படியை உயர்த்த வேண்டுமென நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில் தற்போது அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயர்த்தப்பட்ட அகல விலை படியின் முதல் தவணை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அகல விலைப்படி உயர்விலிருந்து சமூக பாதுகாப்பு ஓய்வூதிய பிரிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அரசு ஊழியர்களுக்கான உறுதியான ஓய்வூதிய திட்டத்தை அரசு ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.