கோவா அரசு வீட்டு வாடகை, குத்தகை மற்றும் வெளியேற்றம் தொடர்பான விதிமுறைகளை திருத்தியுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றம் தொடர்பான முக்கிய விதியை அரசு தற்போது திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஒப்பந்த காலம் முடிந்த பிறகு வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் வீட்டை காலி செய்ய தவறும் பட்சத்தில் மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்.

சில நேரங்களில் இரண்டு தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாடகை வீட்டுக்கு செல்லும்போது கட்டாயம் குத்தகை ஒப்பந்தம் மற்றும் விடுமுறை ஒப்பந்தம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.