திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட் பெற புதிய சேவையை தேவஸ்தானம் தற்போது அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 34 கவுண்டர் களில் டிக்கெட் வழங்கப்பட்டு வரும் நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் களை வாங்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் மூலமாக வி ஐ பி பிரேக் தரிசனத்திற்கான டிக்கெட் பெரும்படி தேவஸ்தானம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது விஐபி தரிசனம் மேற்கொள்வதற்கு சிபாரிசு கடிதங்களை சமர்ப்பித்த பிறகு பக்தர்களின் மொபைல் எண்ணுக்கு செய்தி அனுப்பப்படும். அதில் வரக்கூடிய லிங்கை கிளிக் செய்து பணம் செலுத்தி விட்டால் உங்களுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.