தமிழக வெற்றி கழகம் கட்சிப் பெயரில் தன்னுடைய பெயரை மறைமுகமாக விஜய் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சமூக ஊடகங்களில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவருவதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணியிலும் விஜய் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நினையில் தமிழக வெற்றி கழகம் கட்சிப் பெயரில் தன்னுடைய பெயரை மறைமுகமாக விஜய் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Tamilaga Vetri Kazhagam என்பது சுருக்கமாக TVK என்று அழைக்கப்படுகிறது. இந்த TVK (Thalapathy Vijay) என்ற பெயர் மறைமுகமாக உள்ளது. அதேபோல N.R. (N.Rangasamy), YSR (YS) Rajasekhara Reddy) என்று கட்சியை துவங்கியவர்களின் பெயர்கள் மறைமுகமாக உள்ளன.