சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஓஎன்டிசி என்ற நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணத்திற்கான பயண சீட்டு பெறும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள் தங்களுடைய பயண சீட்டுகளை ஓஎன்டிசி நெட்வொர்க்கில் இருந்து நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் ondec நெட்வொர்க் உடன் இணைந்துள்ள ரெப்பிடோ, நம்ம யாத்ரி போன் பண்ணு நிறுவனங்களின் செயலி மூலமாக மெட்ரோ பயணிகள் ஒருவழி பயணத்திற்கும் திரும்பி வரும் பயணத்திற்கும் மனம் மெட்ரோ ரயில் பயண சீட்டுகளை சிரமம் இல்லாமல் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் கூகுள் மேப் மற்றும் போன் பே ஆகியவை ஓஎன்டிசி நெட்வொர்க்கில் விரைவில் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது.