தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 4.39 லட்சம் கோடி ரூபாய் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதில் 30 சதவீதம் “ஸ்டாலின் சார் வரி” (Stalin Sir Tax) என்ற பெயரிலும், மற்றுமொரு 10 சதவீதம் அமைச்சர்களுக்கும் லஞ்சமாகச் செல்வதாக அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

அரசிடம் நிதி இல்லை என்று கூறுவது முற்றிலும் பொய் என்று சாடிய விஜய், அரசின் நிதிப் பற்றாக்குறைக்குத் திட்டங்கள் காரணமல்ல, ஆளுங்கட்சியின் ஊழலே முக்கியக் காரணம் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பட்ஜெட் கணக்குகளை விரல் நுனியில் வைத்துக்கொண்டு விஜய் பேசிய இந்த “ஊழல் அட்டவணை” அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.