மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பெண் ஒருவர் திருமணமான ஐந்து மாதத்தில் தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி உள்ளது. இந்த நிலையில் தேனிலவுக்கு வெளிநாடு செல்லலாம் என்று இவர்கள் திட்டமிட்ட நிலையில் அவருடைய கணவர் உள்நாட்டிலேயே செல்லலாம் என்று கூறியுள்ளார் .இதனை அடுத்து கோவா மற்றும் தென்னிந்தியவருக்கு செல்லலாம் என்று அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.  அவருடைய தாயார் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்ட நிகழ்வை முன்னிட்டு அயோத்திக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால் அவருடைய கணவர் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு செல்வதற்கு டிக்கெட்டை புக் செய்துள்ளார்.

இதனால் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக அதிர்ச்சி அடைந்து அந்த பெண் அதனை வெளிக்காட்டி கொள்ள வில்லை. அயோத்தி செல்லவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் அங்கு சென்று வந்து சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு ஜனவரி 19ம் தேதி அன்று அந்த பெண் விவகாரத்துக்கு கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய கணவர் தன்னுடைய திருமணத்திற்கு முன்பிருந்தே தன்னைவிட அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த தம்பதிக்கு போபால் குடும்ப நீதிமன்றம் ஆலோசனை பெற நேரம் கொடுத்துள்ளது.