இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிகளில் கணக்கு தொடங்குபவர்கள் பலரும் சேமிப்பு கணக்கு வைத்திருக்கின்றனர். அவர்களின் கணக்குகளில் அதிகம் இருக்கும் தொகைக்கு ஏற்றவாறு வட்டி விகிதம் வழங்கப்படும். நீங்கள் வங்கிகளில் சேமிக்கும் தொகை காண வட்டி தொகையும் வருமானவரிக்கான கணக்கில் காட்டப்படும். இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தில் பத்தாயிரம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படும்.

இருந்தாலும் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமான வட்டி வரும்போது பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு மீத தொகை வருமான வரி கணக்கில் காட்டப்படும். அதாவது ஒருவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் என்றால் அதற்கான வட்டி 12 ஆயிரம் ரூபாய் ஆகும். வருமான வரி தாக்கலின் போது வட்டியையும் சேர்த்து 5 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக மாறும். இந்த நிலையில் 10 ஆயிரம் ரூபாய் வரி விலக்கு அடைக்கப்பட்டு மொத்த வருமானம் 5,02,000 ஆக கணக்கு வைத்துக் கொள்ளப்படும்.