இந்தியாவில் தபால் துறையில் பெண்களின் தேவையை கருதி பிரத்தியேகமான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தேவைக்கேற்ப மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை தொடங்கி வைத்தார். இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம். மேலும் சில திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் சேமிப்பு சான்றிதழ் திட்டம்:

இந்த திட்டத்தில் பெண்கள் எந்த ஒரு வயதிலும் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் நிலையில் இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் 7.50 சதவீதம் வட்டியை பெறலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா:

இந்த திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் கணக்கை தொடங்கி ஆண்டுக்கு 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். பெண் குழந்தைகள் 18 வயதை தாண்டிய பிறகு டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரை பெறலாம்.

MSSC Vs SSY:

MSSC திட்டம் ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டமாகும். SSy திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம். இதனால் குறுகிய காலத்தில் அதிக வருமானம் பெற இந்த திட்டத்திலும், படிப்பு மற்றும் திருமண செலவுக்காகவும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.