“தாய் இல்லாத பிள்ளை தலைகுனிந்து நிற்கும்” என்பார்கள், ஆனால் இங்கு இரண்டு சிறுவர்கள் தங்களின் வெற்றியைக் கொண்டாடத் தாயின் கல்லறையைத் தேடிச் சென்றுள்ள காட்சி ஒட்டுமொத்த இணையதளத்தையும் உலுக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் கையில் மஞ்சள் நிற ஸ்கூல் ரிப்போர்ட் கார்டை வைத்துக்கொண்டு ஒரு கல்லறைக்கு அருகில் நிற்கின்றனர். அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களின் தாயிடம், தாங்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் காட்டி மகிழ்கின்றனர்.
அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரியவில்லை, இனி தங்களைப் பாராட்டத் தாய் உயிரோடு வரமாட்டார்கள் என்று. கல்லறையின் அருகே அமர்ந்து தாய்க்காக துவா ஓதிவிட்டு, “அம்மா நான் நல்லா படிச்சிருக்கேன் பாருங்க” என்பது போல ரிப்போர்ட் கார்டைக் காட்டும் அந்த விநாடி, கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு நிலையை யாருக்கும் கடவுள் கொடுக்கக் கூடாது” என உருக்கமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
